31."மலையைக் கடுகாக நினைத்தால் வெற்றி நிச்சயம். கடுகைக்கூட மலையாக நினைத்தால் தோல்வியே மிஞ்சும்."
32."இயற்கை, பொறுமை, காலம் ஆகியவைகள்தான் மூன்று சிறந்த மருத்துவர்கள்."
33."செயல்களைக் கடுமையாக்குவது சோம்பேறித்தனம்; அவைகளை எளிமையாக்குவது உழைப்பு."
34."வியப்பு புகழும்; அன்பு ஊமையாய் இருக்கும்."
35."அடிக்கடி கோபம் கொள்ளாதே; அது உன் அழிவுக்கு வழி வகுக்கும்."
36."விரைவில் உயர்வது பெரியது அல்ல. எப்பொழுதும் உயர்ந்தபடி இருக்கவேண்டும். அதுவே பெரிது."
37."ஒருவன் எந்த மனிதனுக்கு அஞ்சுகிறானோ அவனை நேசிப்பதில்லை."
38."மலை புயலுக்கு அசைந்து கொடுப்பதில்லை; அறிவாளி புகழ்ச்சிக்கு அடிமையாவதில்லை."
39."உண்மையான அறிவாளி(அனைவரும்) தன் இரகசியத்தைத் தானே வைத்துக்கொள்ள வேண்டும்."
40."எப்பொருளிலும் யாரிடத்தும் ஒருபோதும் பற்றுதல் வைக்காதே."
உலவு.comல் ஏகப்பட்ட விதிகள் உள்ளனபோலும். எப்பொழுது பார்த்தாலும் கீழிருக்கும் "தப்பு" செய்தி வருகிறது. ஆகவே உலவு உலவியில் இடமுடியவில்லை.
Friday, April 16, 2010
யாரோ சொன்னது - 31 - 40
Posted by ஞானவெட்டியான் at 4:33 PM 0 comments
Labels: யாரோ சொன்னது
Tuesday, April 13, 2010
யாரோ சொன்னது - 21 - 30
21. உன்னுடைய விருப்பங்கள் மகிழ்ச்சி தருவதில்லை; பிறர் உன்னை விரும்புவதே மகிழ்ச்சி தரும்.
22. "பண்போடு பொருந்தாத அனுதாபம் எல்லாம் மறைமுகமான் தன்னலமேயாகும்."
23. "உழைப்புதான் ஒரு மனிதனை மற்றொருவனைவிட முந்தச் செய்கிறது."
24. "நாளைய நன்மைக்காக இன்றைய தேவைகளைக் குறைத்துக் கொள்."
25. "சீரிய எண்ணங்களைச் செயல்படுத்தும்பொழுது அவை சிறந்த செயல்களாகின்றன."
26. "உடல் நலமுள்ளவனுக்கு நம்பிக்கை இருக்கும்; நம்பிக்கை உள்ளவனுக்கு எல்லாம் இருக்கும்."
27. "மன உறுதியைப்போல் உழைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம்."
28. "உண்பதற்காக வாழாதே! வாழ்வதற்காக உண்."
29. "நட்பு உண்டாக அன்பு மட்டும் போதாது; இலட்சிய ஒற்றுமையும் வேண்டும்."
30. "எழுதுவது அருமை; எழுதியதைப் பழுதறக் கற்றல் அதிலும் அருமை; அதன்படி நடத்தல் அருமையோ அருமை."
Posted by ஞானவெட்டியான் at 4:45 PM 3 comments
Labels: யாரோ சொன்னது
Monday, April 05, 2010
யாரோ சொன்னது - 11 - 20
11."உன்னை நீ நம்பினால் ஊர் உன்னை நம்பும்."
12."பொறுமைசாலிக்குக் கோபம் வரும்பொழுது எச்சரிக்கையுடன் விலகி
இருந்துகொள்வது நல்லது."
13."துன்பங்கள் நிலையானவை அல்ல; அவை ஆற்றில் ஓடும் தண்ணீர்போல் ஓடிவிடும்."
14."வல்லமையற்ற நீதி ஆற்றலற்றது; நீதியற்ற வல்லமை கொடுங்கோன்மை."
15."எந்த ஒரு முட்டாளும் பணம் ஈட்டமுடியும்; ஆனால் அறிவாளியால் மட்டுமே அதைக் காப்பாற்ற இயலும்."
16."ஒருவனைத் தனிமையில் கண்டிக்கவேண்டும்; பலர் முன் பாராட்டவேண்டும்."
17."சிந்தனையாளனுக்கு உலகம் ஒரு இன்பியல் நாடகம்; செயலற்றவர்கட்கோ துன்பியல் நாடகம்."
18."இயலுமாயின் பிறரைவிட அறிவாளியாக இரு; ஆனால், அதை அவர்களிடம் கூறாதே!"
19."நண்பனுக்காக உயிரைக் கொடுப்பது எளிது; ஆனால், உயிரைக் கொடுப்பதற்குரிய நண்பன் கிடைப்பதுதான் அரிது."
20."துன்பம் வந்துவிடுமோ என்னும் அச்சம் துன்பத்தைவிடக் கொடியது; துயரமானது."
Posted by ஞானவெட்டியான் at 11:05 AM 0 comments
Labels: யாரோ சொன்னது
Sunday, March 28, 2010
யாரோ சொன்னது - 6 - 10
6."அழகுக்கு ஆற்றல் அதிகம்; ஆயினும் அதைவிட ஆற்றலுடையது பணமே!"
7."செலவுக்குமேல் வரும்படி உள்ளவன் செல்வன்; வரவுக்குமேல் செலவழிப்பவன் ஏழை."
8."பெண்ணை ஒரு பொருள்போல் நடத்துவதால்தான் எல்லா இன்னல்களும் வருகின்றன."
9."எழுதப்படும் சொல்லைவிட நாக்கால் பேசப்படும் சொல்லே வலிமை மிக்கது."
10."நம்பிக்கை இல்லாத இடத்தில் முயற்சியும் இருக்க முடியாது."
Posted by ஞானவெட்டியான் at 12:44 PM 0 comments
Labels: யாரோ சொன்னது
Tuesday, February 23, 2010
யாரோ சொன்னது - 1 - 5
1."உள்ளத்தில் அன்பு இருந்தால் மட்டும் போதாது; அது செயலில் வெளிப்படவேண்டும்."
2."துயரத்துக்கு ஒரே மாற்று மருந்து சாதனைதான்."
3."போனால் வராதது ஒன்றே ஒன்று; அதுதான் காலம்(நேரம்)."
4."பரிசுத்த இதயத்தைப் பெற்று இருப்பதே மனிதனின் முதல் தகுதி."
5."ஆண்களைவிடப் பெண்களுக்குப் பசி இருமடங்கு; புத்தி நான்கு மடங்கு; ஆனால் ஆசைகளோ எட்டு மடங்கு." (பெண்கள் வருந்தற்க)
Posted by ஞானவெட்டியான் at 12:11 PM 2 comments
Labels: யாரோ சொன்னது
Saturday, March 18, 2006
32. அபிராமி அந்தாதி ஓதக் கிட்டும் பலன்கள் - 4
32. அபிராமி அந்தாதி ஓதக் கிட்டும் பலன்கள் - 4
**************************************************
76.குடும்ப ஒற்றுமைக்கு - "குறித்தேன் மனத்தில்................."
77.பகை நீங்க - "பயிரவி பஞ்சமி..............................."
78.ஆயுள் நீடிக்க - "செப்பும் கனக கலசமும்......................"
79.சிற்றினம் சேராதிருக்க - "விழிக்கே அருளுண்டு..............."
80.எல்லையற்ற ஆனந்தம் கிட்ட - "கூட்டிய வாஎன்னைத்........."
81.நன்னடத்தை உண்டாக - "அணங்கே! அணங்குகள்............"
82.நினைவு அதிகரிக்க - "அளியார் கமலத்தில்..................."
83.அனைத்தும் கிட்ட - "விரவும் புதுமலர் இட்டு................."
84.சிறந்த குரு கிட்ட - "உடையாளை, ஒல்கு..................."
85.நல்வழி கிட்ட - "பார்க்கும் திசைதொறும்....................."
86.பயமின்றி இருக்க - "மால் அயன் தேட......................"
87.செயற்கரியன செய்து புகழடைய - "மொழிக்கும் நினைவுக்கும்..."
88.அபிராமியை சரணடைய - "பரம் என்று உனை................"
89.அன்னையை மறவாதிருக்க - "சிறக்கும் கமலத்..............."
90.பிரிந்தவர் கூட - "வருந்தா வகை..........................."
91.உயர் பதவி கிட்ட - "மெல்லிய நுண்ணிடை.................."
92.கொள்கைப் பிடிப்புக்கு - "பதத்தே உருகி......................"
93.உண்மை நிலையறிய - "நகையே இஃது......................"
94.மனநோய் அகல - "விரும்பித் தொழும்......................."
95.நன்மை தீமை யாவையும் சமமென நினைக்க - "நன்றே வருகினும்...."
96.சகல கலைகளிலும் சிறக்க - "கோமளவல்லியை.............."
97.தன் துறையில் சிறக்க - "ஆதித்தன் அம்புலி.................."
98.வஞ்சகத்திலிருந்து விடுபட - "தைவந்து நின்னடித்............"
99.திருமணம் நடக்க - "குயிலாய் இருக்கும்...................."
100.அன்பால் பிணைக்க - "குழையத் தழுவிய.................."
Posted by ஞானவெட்டியான் at 5:47 PM 0 comments
32. அபிராமி அந்தாதி ஓதக் கிட்டும் பலன்கள் - 3
32. அபிராமி அந்தாதி ஓதக் கிட்டும் பலன்கள் - 3
****************************************************
51.மோகம் நீங்க - "அரணம் பொருள்............................"
52.அம்மை திருவடி அடைய - "வையம் துரகம்..................."
53.தவம் சிறக்க - "சின்னஞ் சிறிய மருங்கினில்..................."
54.வறுமை நீங்க - "இல்லாமை சொல்லி........................."
55.மனக் கவலை நீங்க - "மின் ஆயிரம் ஒருமெய்................."
56.வசீகரிக்கும் திறன் கூட - "ஒன்றாய் அரும்பிப்................."
57.அறங்கள் செய்ய - "ஐயன் அளந்தபடி........................."
58.நலம் கிட்ட - "அருணாம் புயத்தும்..........................."
59.நன்மக்கட் பேறு பெற - "தஞ்சம் பிறிது இல்லை................"
60.மெய்யுணர்வு தோன்ற - "பாலினும் சொல்....................."
61.நம்மை அறிய - "நாயேனையும் இங்கு........................"
62.அச்சம் நீங்க - "தங்கச் சிலைகொண்டு......................."
63.நல்லறிவு கிட்ட - "தேறும்படி சில..........................."
64.மனம் ஒரு நிலைப்பட - "வீணே பலிகவர்...................."
65.மக்கட்பேறு கிட்ட - "ககனமும் வானும்......................"
66.தமிழ்ப் புலமை கிட்ட - "வல்லபம் ஒன்றறியேன்.............."
67.நல்வழி செல்ல - "தோத்திரம் செய்து........................"
68.எல்லாச் செல்வமும் கிட்ட - "பாரும் புனலும்................."
69.சகல செல்வமும் பெருவாழ்வும் கிட்ட - "தனம் தரும்.........."
70.கலைகளில் சிறக்க - "கண்களிக்கும் படிக்கண்டு..............."
71.மனம் உறுதி வளர - "அழகுக்கு ஒருவரும்...................."
72.பிறவிப் பிணி தீர - "என்குறை தீரநின்று......................"
73.நிதி உதவி கிட்ட - "தாமம் கடம்பு............................"
74.தொழில் மேன்மை கிட்ட - "நயனங்கள் மூன்றுடை............."
75.விதியை வெல்ல - "தங்குவர் கற்பகத்........................"
..........தொடரும்
Posted by ஞானவெட்டியான் at 5:20 PM 0 comments
32. அபிராமி அந்தாதி ஓதக் கிட்டும் பலன்கள் - 2
32. அபிராமி அந்தாதி ஓதக் கிட்டும் பலன்கள் - 2
**************************************************
26.நாவன்மை மிக - "ஏத்தும் அடியவர் ஈரேழ்....................."
27.தீய எண்ணங்கள் அழிய - "உடைத்தனை, வஞ்சப்..............."
28.அரச பதவி கிட்ட - "சொல்லும் பொருளும்....................."
29.எட்டு சித்திகளும் பெற - "சித்தியும் சித்திதரும்.................."
30.அச்சம்,ஆபத்து அகல - "அன்றே தடுத்தென்னை................."
31.பெண்ணாசை அகல - "உமையும் உமையொரு.................."
32.மரணம் நேராதிருக்க - "ஆசைக்கடலில் அகப்பட்டு..............."
33.தாயின் துணை கிட்ட - "இழைக்கும் வினைவழியே..............."
34.செல்வம் பெருக - "வந்தே சரணம் புகும்......................."
35.தேவர்களுக்கும் கிட்டாத பதவி பெற - "திங்கட் பகவின்.........."
36.மெய்ஞானம் கிட்ட - "பொருளே!பொருள் முடிக்கும்.............."
37.ஆடை அணிமணி கிட்ட - "கைக்கே அணிவது..................."
38.இந்திர பதவி கிட்ட - "பவளக் கொடியில்......................."
39.அகால மரணம் நேராதிருக்க - "ஆளுகைக்கு உன்தன்............"
40.முற்பிறவிப் பயன் கிட்ட - "வாள்நுதற் கண்ணியை.............."
41.அடியார்கள் உறவு கிட்ட - "புண்ணியம் செய்தனமே.............."
42.அன்னை அருள் கிட்ட - "இடம் கொண்டு விம்மி................"
43.பகை நீங்க - "பரிபுரச் சீறடிப்.................................."
44.குடும்பம் சிறக்க - "தவளே இவள், எங்கள்....................."
45.பாவம் நீங்க - "தொண்டு செய்யாது..........................."
46.தோஷம் நீங்க - "வெறுக்கும் தகைமைகள்....................."
47.பரம்பொருளைக் காண - "வாழும் படிஒன்று...................."
48.உடல் பற்று நீங்க - "சுடரும் கலைமதி........................"
49.மரண பயம் நீங்க - "குரம்பை அடுத்துக்......................."
50.தேர்வுகளில் வெற்றி பெற - "நாயகி, நான்முகி................"
------தொடரும்
Posted by ஞானவெட்டியான் at 4:40 PM 0 comments
32. அபிராமி அந்தாதி ஓதக் கிட்டும் பலன்கள்
அன்புத் தம்பி அமரர் தகவல் தங்கவேலுவின் இறுதி அவாவை நிறைவுசெய்ய அவரின் கருத்துக் கருவூலத்திலிருந்து எடுத்து, கொத்தி வலைப்பூவில் ஏற்றுகிறேன்.
------ ஞானவெட்டியான்
*************************************************************************
32. அபிராமி அந்தாதி ஓதக் கிட்டும் பலன்கள்
*****************************************
1. ஞானமும் வித்தையும் பெற - "உதிக்கின்ற செங்கதிர்!..........."
2. தெய்வத்தின் துணை கிட்ட - "துணையும் தொழும்..................."
3. பாவம் போக்க - "அறிந்தேன் எவரும் அறியா ............................"
4. உன்னத நிலையை அடைய - "மனிதரும் தேவரும் ................"
5. மனக்கவலை தீர - "பொருந்திய முப்புரை செப்புரை................."
6. பிறரைத் தன் வயப்படுத்த - "சென்னியது உன் பொன்..............."
7. மோட்ச நிலை அடைய - "ததியறு மத்தில் சுழலும்....................."
8. துறவறம் சிறக்க - "சுந்தரி, எந்தை துணைவி................................."
9. குழந்தைகட்கு ஞானம் கிட்ட - "கருத்தன, எந்தைதன் ..............."
10.நிலையான இன்பம் கிட்ட - "நின்றும் இருந்தும்..........................."
11.மனக்கவலை நீங்கி மகிழ்ச்சி கிட்ட - "ஆனந்தமாய் என்..........."
12.புண்ணியம் கிட்ட - "கண்ணியது உன் புகழ்....................................."
13.வைராக்கியம் கிட்ட - "பூத்தவளே! புவனம்......................................"
14.தலைமைப் பொறுப்பு கிட்ட - "வந்திப்பவர் உன்ன........................"
15.பெருஞ் செல்வமும் சுவ்ர்க்கமும் கிட்ட - "தண் அளிக்கு..........."
16.அறிவு பெருக - "கிளியே! கிளைஞர்....................................................."
17.பெண்களின் அழகு மெருகூட்ட - "அதிசயமான.............................."
18.மரணத்தை வெல்ல - "வவ்விய பாகத்து............................................"
19.பேரின்பம் கிட்ட - "வெளிநின்ற நிந்திருமேனியைப்....................."
20.பெண்களின் மங்கலம் நிலைக்க - "உறைகின்ற நின்...................."
21.பெண்கள் நலமுடன் வாழ - "மங்கலை, செங்கலசம்...................."
22.பிறவா வரம் கிட்ட - "கொடியே! இளவஞ்சிக்...................................."
23.மன சஞ்சலம் உண்டாகாதிருக்க - "கொள்ளேன் மனத்தில்........"
24.தீராப் பிணிகள் தீர - "மணியே! மணியின் ஒளியே!........................"
25.நினைத்த காரியம் நடக்க - "பின்னே திரிந்து......................................"
......தொடரும்
Posted by ஞானவெட்டியான் at 4:06 PM 0 comments
Monday, March 13, 2006
அமரர் தகவல் தங்கவேலு
அமரர் தகவல் தங்கவேலு
*****************************
தமிழ் பணிசெய்த கரம்
தன் பணி முடிந்த தென்று
விடல்தனை முடக்கிக் கொண்டு
வீடு சென்றதோ!
சென்ற திசை நோக்கி என் வணக்கம்.
- DR.R.Vasudevan
கரூருக்கு அருகில் கொடுமுடியில் 1946ம் ஆண்டு ஒரு எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். SSLC வரை படித்தார். பின்னர் தந்தை இறந்ததும் அண்ணனுக்குத் தன் பங்கான 2காணி நிலத்தை விட்டுக்கொடுத்துவிட்டு 10,000 உரூபாயுடன் கரூருக்குப் பிழைக்க வந்தார். 1967ல் கரூர்வந்து ஊர்க்கோடியில் ஒரு பெட்டிக்கடை வைத்தார்.
அப்போது அவர் மளுக்கு 3வயது; மகனுக்கு 1வயது. 1980ல் வையாபுரிநகர் என்னும் காலனியில் அதே பெட்டிக்கடையை மாற்றினார். STATE BANK OF INDIAவில் ஒரு சேமிப்புக்கணக்கு ஒன்று வைத்திருந்தார். 1984ல் தன் மைத்துனனுக்கே தன் மகளை எளிய முறையில் திருமணம் செய்து வைத்தார். மைத்துனன் சேனைப்படையில் ஒரு ஹவில்தார். ராஜஸ்தானில் இருக்கிறார்.1987ல் மனைவியின் மறைவு அவருக்குத் தாளவியலா அயர்வைத் தந்தது.
1988ல் களப்பணி அதிகாரியாக நான் கரூர் சென்றேன். அங்குதான் அறிமுகமானார் தங்கவேலு. அவரின் கடையைத் தாண்டித்தான் நான் என் வீட்டிற்குச் செல்லவேண்டும். ஆகவே, தாளிகைகள் வாங்குவதெல்லாம் அவர் கடையில்தான். அவரிடம் என்னை ஈர்த்தவை இரண்டு. சோம்பலற்ற கடின உழைப்பும் தமிழின்பால் அவர் வைத்திருந்த பற்று.
உரையாடும்போதெல்லாம் அவர் உதிர்க்கும் பொன்மொழிகளும், சொற்றொடர்களும் என்னை வியக்க வைக்கும். அப்பொழுதுதான், தங்கம் இந்த நாட்குறிப்புக்களில் நீங்கள் படித்த தகவல்களையெல்லாம் குறித்து வையுங்களேன்; மற்றவருக்குப் பயன்படுமே என்றேன். சொன்னதைத் தவறாமல் செய்து வைத்தார். நானும் அவ்வப்போது வாங்கிப் படிப்பது வழக்கம்.
கடையை விரிவாக்க 10,000 உரூபாய் கடன் வங்கியில் வாங்கித் தந்தேன். அவரும் தவறாது தவணைப் பணம் செலுத்தி விடுவார். அப்போழுதுதான் சோதனை ஆரம்பமாகியது.தனது படிப்பை முடித்த தன் மகனைக் கடையில் வைத்துச் சென்றபோதெல்லாம் கையிருப்பு குறைய ஆரம்பித்தது. மகனும் இரவு நேரங்களில் குடித்துவிட்டு அலைய ஆரம்பித்தான். 1991ல் கடையை மூடவேண்டிய சூழ்நிலை வந்தது. கடன் பாக்கி 4,000 உரூபாய் இருந்தது. அப்பொழுதும்கூட தகவல் சேகரிப்பை விடவில்லை. நூலகம் சென்று படித்து குறித்து வைப்பார்.
அந்த காலகட்டத்தில், 1994ல் கடன் இரத்து செய்யும் திட்டம் வந்தது. நிலைமையை எனது மூத்த அதிகாரியிடம் விளக்கிக் கூறி கடனை இரத்து செய்து கொடுத்தேன். ஒரு ஆடை நெய்யும் கம்பனியில் கணக்கப் பிள்ளை வேலை வாங்கிக் கொடுத்தேன்.
"பெட்டியிலே பணமில்லே; பெத்த புள்ள சொந்தமில்லே" என்று மகனும் ஒரு பெண்ணைக் காதலித்து மணந்து தனியே சென்றுவிட்டான்.
காலத்தைத் தனியே ஓட்டிவந்த தங்கவேலுவை என் நண்பனின் இல்லத்தில் தங்க வைத்தேன். அவர் கணினி வைத்து data processing செய்து வருகிறார். அங்கேயே படுக்கை. அப்போதுதான் கணினி பயன்பாட்டை விளக்கி வலைப்பூ பதியச் சொன்னேன். அங்குள்ள நண்பனின் மகன் உதவி செய்தான். அதில் நிம்மதி கண்டார் தங்கவேலு.
அந்த நிம்மதியிலேயே, நிரந்தர நிம்மதி அடைந்துவிட்டார். அமரரானார்.
இரங்கல் செய்திகள்
***********************
At 11:58 PM, குமரன் (Kumaran) said...
மிக்க வருத்தம் தரும் செய்தி. தகவல் தங்கவேலு அவர்களின் வலைப்பதிவுகளைத் தவறாமல் படித்து வந்தேன். அவரின் ஆன்மா நிறைநிலையை எய்த ஆண்டவனை வேண்டுகிறேன்.
நெருநல் இருந்தார் இன்றில்லை என்னும் பெருமை
உடைத்திவ்வுலகு.
At 12:16 AM, abiramam said...
Its very sad to hear this news. May ALIMIGHTY rest his soul in Peace..
At 12:39 AM, Agent 8860336 ஞான்ஸ் said...
திரு.தங்கவேலு அவர்களின் கும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
At 12:52 AM, Geetha Sambasivam said...
Migavum varuthamana eithi. Avarin Kudumbathirku enathu Azhntha anuthapangal.
At 12:57 AM, முகமூடி said...
மனதிற்கு பாரமான செய்தி. அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
At 1:47 AM, பரஞ்சோதி said...
அதிர்ச்சியான செய்தி, மனம் வருந்துகிறது.
அய்யா தங்கவேலு அவர்களின் வலைப்பதிவுகளை படித்து வந்த வாசகரின் நானும் ஒருவன்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய இரங்கல்கள்.
At 2:04 AM, அனுசுயா said...
மிகவும் அதிர்ச்சியான தகவல். அன்பரே சரியாக அவர் என்று இறந்தார் எனச் சொல்ல இயலுமா..? ஒரு சில குழப்பங்கள் காரணமாக இதனைக் கேட்கிறேன்.
At 2:34 AM, நாமக்கல் சிபி said...
தமிழ் பணிசெய்த கரம்
தன் பணி முடிந்த தென்று
விடல்தனை முடக்கிக் கொண்டு
வீடு சென்றதோ!
சென்ற திசை நோக்கி என் வணக்கம்.
- DR.R.Vasudevan
தகவல் தங்கவேலு என்று பல தகவல்களை தந்த அன்னாரின் பணி மிகவும் பாராட்டத்தக்கது.
எந்த ஒரு பயனையும் கருதாமல் அவர் செய்த பணி பெருமைக்குறியது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.
- மஞ்சூர் ராசா
வருந்தத்தக்க செய்தி :(
அண்ணாரின் குடும்பத்திற்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல், ஞானம் ஐயாவிடம் பேசி வெகுநாட்களாகின்றன, இன்று இரவு பேச முயற்சிக்கின்றேன்.
- சிவா
விண்ணிலே
தமிழ் பற்றாக்குறையென்று
வானுலகு
வாரியணைத்துக்கொண்டதோ
உன்னை
உன்னிலே
தமிழ் கண்டு...
எங்கள்
தங்கத்தமிழனே
தங்கவேலுவே!
நின் புகழ்
நீடு வாழ்கவே!
ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கும்
- இரா.பாலகுமார்
அய்யாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
- விகே.பெரியசாமி.
முத்தமிழ்க் குழுமத்திலிருந்து.
At 3:05 AM, Karunaa said...
எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவிக்கிறேன் குமரன்.அவரது குடும்பத்தாருக்கு எனது அனுதாபத்தைச் சொல்லிகிடுறேன்!
At 4:10 AM, கைப்புள்ள said...
மிகவும் வருத்தம் தரும் செய்தி. அன்னாருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி அவர்தம் குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
At 4:20 AM, முத்துகுமரன் said...
மிகவும் அதிர்ச்சிகரமான செய்தி. அவர் பதிவை ஒரே ஒரு முறை கடந்திருக்கிறேன். அவரது மரைவுற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த துயரத்திலிருந்து மீண்டு வரும் வல்லமையை அன்னாரது குடும்பத்தாருக்கு இறைவன் அருள வேண்டும்.
At 4:32 AM, நாமக்கல் சிபி said...
//அன்பரே சரியாக அவர் என்று இறந்தார் எனச் சொல்ல இயலுமா..? //
அனுசுயா! அவர் 11/03/2006 அன்று காலை இறந்தார். இது பற்றிய ஐயா ஞானவெட்டியான் அவர்களின் பதிவைப் பார்க்க இப்பதிவில் இருக்கும் மேலும் விவரங்கள் என்ற சுட்டிக்குச் செல்லவும்.
At 4:46 AM, geethusadhu said...
திரு.தங்கவேலு அவர்களின் கும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
At 5:52 PM, துளசி கோபால்சொல்லுவது என்னவெனில் ...
அன்னாரின் ஆத்மா சந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம்.
At 6:36 PM, சிவனடியார்சொல்லுவது என்னவெனில் ...
மறைந்த அண்ணார் தங்கவேலு அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். கும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
At 6:43 PM, தமிழ்பயணிசொல்லுவது என்னவெனில் ...
தங்கவேலு அவர்களின் மறைவால் வாடும் அவர் குடும்பத்தினரக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
At 7:14 PM, Thekkikattanசொல்லுவது என்னவெனில் ...
ஐயா, இச் செய்தியை கேட்டதும் மிகவும் மனது வாடிப்போனது. அன்னாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டிக்கிறேன். அவர்களின் குடும்பாத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்ளும். தெகா.
At 7:37 PM, Dharumiசொல்லுவது என்னவெனில் ...
அவர் பிரிவால் துன்புறும் அவர்தம் குடும்பத்தினருக்கும், ந்ல்ல நண்பரை, தம்பியை இழந்து நிற்கும் உங்களூக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்
At 7:41 PM, Ennarசொல்லுவது என்னவெனில் ...
மறைந்த தங்கவேலு அவர்களின் ஆன்மா சாந்தியடை வேண்டுகிறேன்.
அவருக்கு உடல் நிலையில் என்ன காரணம்
அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இறங்களைத்தெரிவித்துக்கொள்கிறேன்.
At 7:43 PM, அப்டிப்போடு...சொல்லுவது என்னவெனில் ...
மிகவும் வருத்தமாக உள்ளது. அவர் குடும்பத்தார்க்கு என் அனுதாபங்கள். அருகில் இருந்து ஆறுதல் கொடுங்கள்.
At 7:55 PM, பரஞ்சோதிசொல்லுவது என்னவெனில் ...
அய்யா,
செய்தி படித்து மனம் வருந்துகிறேன்.
கடைசி நேரத்திலும் மற்றவர்களுக்கு பயன்பட வேண்டும் என்ற மகத்தான எண்ணத்தை கொண்ட அய்யா தங்கவேலு மிகப்பெரிய மகான்.
அன்னாரின் ஆத்மா இறையனடி சேர இறைவனை வேண்டுகிறேன், குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.
At 9:10 PM, AJeevanசொல்லுவது என்னவெனில் ...
அன்னாரின் ஆத்மா சந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம்.
முகம் தெரியாத உறவாக இருந்தாலும் செய்தியை படித்ததும் மனதுக்குள் வேதனை கொப்பளிக்கிறது.
இது உணர்வுகளால் ஏற்பட்ட உந்துதலா?
அவரது பிரிவில் துயருறும் அன்னாரது குடும்பத்தினரோடு நாமும் அத் துயரை பகிர்ந்து கொண்டு
அன்னாரது மறைவால் வாடும் அவர் குடும்பத்தினரக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
At 9:19 PM, AJeevanசொல்லுவது என்னவெனில் ...
முகம் தெரியாவிடினும்
எழுத்தால் நம்மோடு வாழ்ந்த ஒரு உறவை பிரிந்த செய்தி கேட்டமதும் என் இதயம் ஒரு கணம் நின்று துடித்ததே..........
இது மானசீக உறவா ஐயா?
உங்கள் இழப்பில் வருந்தும் உறவுகளோடு உங்கள் பக்கம் நின்று ஆறுதல் சொல்ல முடியாத தூரத்தில் இருக்கிறேன்.
உங்கள் ஆன்மா அமைதியாய் இறைவனடி சேர பிராத்திக்கிறேன்.
உங்கள் உறவாய் என் ஆழ்ந்த அனுதாபங்கள் உங்கள் குடும்பத்தினருக்கு........
அஜீவன்
சுவிஸ்
At 9:24 PM, AJeevanசொல்லுவது என்னவெனில் ...
தங்கள் பிரிவுச் செய்தி கேட்டதும்
என் இதயம் ஒரு கணம் நின்று துடித்ததே ஐயா?
இதுதான் மானசீக உறவா?
ஒரு சில முறைகள் உங்கள் வலைப்பின்னலுக்குள் சிக்கியிருக்கிறேன்.
இன்று?
உங்கள் இழப்பில் உங்கள் குடும்பத்தினருடன்
இணைந்து துயரை பகிர்ந்து கொள்கிறேன்.
உங்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.
At 11:19 PM, செல்வன்சொல்லுவது என்னவெனில் ...
மிகவும் மனம் வருந்துகிறேன் பெரிய ஞானி ஐயா.தங்கவேலு ஐயா அவருக்கு பிடித்த இறைவன் திருப்பாதத்தை அடைந்து விட்டார்.நமக்காக அங்கிருந்து இறைவனை வேண்டுவார் என்பதில் ஐயமில்லை.
அவரது வாழ்க்கை குறிப்பை முடிந்தால் வலையில் இடுங்கள்.அவரை பற்றி முழுதாக அறிந்துகொள்ள எங்களுக்கு உதவியாக இருக்கும்.
At 1:40 AM, Idly Vadaiசொல்லுவது என்னவெனில் ...
ஐயா,
வருத்தமாக உள்ளது. அவர் குடுபத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
At 7:07 AM, மூர்த்திசொல்லுவது என்னவெனில் ...
அன்பின் ஞானம் அய்யா,
தங்கவேலு அய்யாவுடன் அவ்வளவு அதிகப் பழக்கம் இல்லை என்றாலும் அவரின் வலை படித்து மகிழ்ந்து இருக்கிறேன். அன்னாரின் தகவல்களை பயன்படுத்திக்கொள்ள அனுமதிகூட கேட்டு இருந்தேன். நல்ல பல அரிய தகவல்களை வாரி வழங்கிக் கொண்டிருந்த அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.
At 7:20 AM, SKசொல்லுவது என்னவெனில் ...
என் மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழுலகத்திற்கு அவர் ஆற்றிய சேவை மகத்தானது
At 7:20 AM, மதி கந்தசாமி (Mathy)சொல்லுவது என்னவெனில் ...
என் ஆழ்ந்த அனுதாபங்கள். குடும்பத்தாருக்கு என் ஆறுதலைத் தெரிவித்து விடுங்கள் ஐயா.
http://thakavalkal.blogspot.com - had to search in thamizmanam for the links. thought it would be useful to people.
-மதி
At 9:47 AM, சிவமுருகன்சொல்லுவது என்னவெனில் ...
மறைந்த அண்ணார் தங்கவேலு அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.அவர்தம் பிரிவால் துன்புறும் குடும்பத்தினர், நன்பரை, தம்பியை இழந்து நிற்கும் உங்களூக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
Posted by ஞானவெட்டியான் at 6:03 PM 1 comments
Wednesday, February 08, 2006
31.Indians come up with Kosmix to challenge Google
31.Indians come up with Kosmix to challenge Google
******************************************
Sunday, 05 February , 2006, 08:49
Silicon Valley: Two Indian computer wizards who studied along with Google co-founders Larry Page and Sergey Brin at Stanford University are now launching a start-up to compete with the world’s best known search engine.
Anand Rajaraman and Venky Harinarayan are betting that Kosmix with its deep search technology can challenge Google by gleaning more about the overall content of Webpages searched instead of their popularity.
Google basically searches pages based on a sort of popularity contest and not necessarily its content, but Kosmix creators says they took a different approach and developed a new kind of categorisation technology.
The two Indians, who were among the co-founders of web database company Junglee, hope their deep search technology can improve upon Google’s one-size-fits-all approach.
Kosmix asks users to define a category for a search. If a search term is related to health, users can make a query in a health-related search box. That way, it can find Webpages closely associated in meaning with the search term.
It then looks at what Webpages link to other pages—to take a bigger stab at judging the pages subject.
If a Webpage says something similar to the page it links to, you can get enough information to categorise it by topic, says Harinarayan.
The company, set up last year, will officially launch at the DEMO conference for start-ups in Phoenix next week.
Kosmix has already started testing a health search on its Web site. Over the next year, the company will release numerous categories of search—from health to travel, politics and finance. It plans to unveil a general search box within a year.
Posted by ஞானவெட்டியான் at 12:43 PM 2 comments
தோழி.கீதாவின் சமையல் குறிப்புகள்
தினமலரில் இன்று தோழி.கீதாவின் சமையல் குறிப்புகள் வலைப்பூ இடம் பெற்றுள்ளது. அவருக்கு தகவல் தங்கவேலுவின் வாழ்த்துகள்.
Posted by ஞானவெட்டியான் at 9:54 AM 0 comments
Monday, January 30, 2006
30.விவேகநந்தரின் பொன்மொழிகள்
30.விவேகநந்தரின் பொன்மொழிகள்
****************************************
நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் (அதற்காக சிங்கமாக ஆகவேண்டும் என் நினைத்தால் அது முடியாது). உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்! (ஆனால் முயற்சி தேவை).
உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!
"நான் எதையும் சாதிக்க வல்லவன்" என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும்.
பலமே வாழ்வு; பலவீனமே மரணம்!
கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.
உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி.
அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு.
மிருக பலத்தால் அல்லாமல் ஆன்மிக பலத்தால் மட்டுமே எழுச்சி பெறமுடியும்.
சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.
நீ செய்த தவறுகளை வாழ்த்து. அவைகள், நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன.
அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்.
உங்களால் யாருக்கும் உதவி செய்ய முடியாது. மாறாகச் சேவைதான் செய்ய முடியும்.
உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.
Posted by ஞானவெட்டியான் at 11:00 AM 0 comments
Monday, January 23, 2006
29. பற்றுக பற்றற்றான் தாளினை
29. பற்றுக பற்றற்றான் தாளினை
************************************
ஓர் முனிவருக்கு 5 சீடர்கள். கற்றுக்கொள்ளவேண்டியதை எல்லாம் கற்றுக்கொண்டபின் ஒரு சீடனுக்கு ஒரு ஐயம். அதை முனிவரிடமே கேட்டுவிடுவதென நினைது,"குருவே! இறைவன் மீது பற்று வைத்தால் மற்ற பற்றுக்கள் எல்லாம் தளர்ந்துவிடும் என்றீர்கள். அது எப்படடி?" என்றான்.
அதற்கு முனிவர் புன்னகைபூத்து,"அதோ, அந்த விறகுக் கட்டைக் கொண்டுவா" என்றார். பின்னர்,"இக்க்ட்டின்மீது இன்னொரு கயிறால் இறுகக் கட்டு என்றார்". சீடனும் அங்ஙனமே நன்றாக இறுகக் கட்டினான். பின்னர் முனிவர்,"இப்போது னுதலில் கட்டியிருந்த கயிற்றைப் பார்" என்றார். சீடன் கட்டு தளர்ந்திருப்பதைக் கண்டான்.
இதேபோல்தான், இறைவன் மீது பற்று என்னும் கட்டினை இறுக்கும்போது, பந்தம் முதலான கட்டுக்கள் எல்லாம் தளர்ந்துவிடும்" என்றார். ஐயம் தெளிந்த சீடனும் மகிழ்ந்தான்.
Posted by ஞானவெட்டியான் at 6:53 AM 7 comments
Saturday, January 21, 2006
28. தமிழ்மணத்துக்கு தங்கவேலுவின் நன்றி
28. தமிழ்மணத்துக்கு தங்கவேலுவின் நன்றி
*********************************************
அன்பு நண்பர்களே,
என்னுடைய வலைப்பூவைப் பற்றி இரண்டாம் முறையாகத் தினமலரில் வெளியான செய்தி.
இதுவும், அண்ணண் திரு.ஞானவெட்டியான் அவர்கள் சொல்லியபின்தான் எனக்குத் தெரியும். அவர்கள் 1988ல், கரூர் வங்கியில் களப் பணியாளராக இருந்தபொழுது என் பெட்டிக் கடையில்தான் புத்தகங்கள் வாங்குவார். அவர்தான் எனக்கு ஊக்கம் கொடுத்து, வலைப்பூவுக்குள் இழுத்து விட்டவர். அவருக்கு முதலில் நன்றி.
இரண்டாவதாக, தமிழ்மணம் இல்லையென்றால், இது தினமலரின் பார்வைக்குப் போயிருக்குமா? சந்தேகம்தான். அதனால், தமிழ்மணத்துக்கும், கணினி சிக்கல்களில் மாட்டி இருந்தபோது ஆலோசனை சொல்லி உதவி செய்த நண்பர் திரு.காசி அவர்களுக்கும் என் நன்றி.
Posted by ஞானவெட்டியான் at 6:42 PM 15 comments
Thursday, January 19, 2006
26. அன்னையின் பொன்மொழிகள்
26. அன்னையின் பொன்மொழிகள்
*************************************
நீங்கள் செய்யும் தொழில்கள் அனைத்திலும் மகிழ்ச்சி கொள்ளவேண்டும்.
எப்படி வாழ்வது என்பது தெரிந்துவிட்டால், வாழ்க்கை முழுவதும் அன்பு மயமாகும்.
எப்படிப்பட்ட சூழ்நிலயிலும் அமைதி காத்திட வேண்டும். அதுதான் சிறந்தது.
இந்தியா உலகத்தின் குரு. வருங்கால உலகம் இந்தியாவைச் சார்ந்தே உள்ளது.
அற்புதமான பேச்சைவிட, ஒரு துளி அன்பினால் அதிகம் சாதிக்க முடியும்.
எதிலும் தீமையைப் பார்க்கிற பழக்கத்தையும், குற்றம் காணும் குணத்தையும் தவிற்க வேண்டும்.
உண்மையான அன்பு, எல்லாத் தடைகளையும் குறைபாடுகளையும் தகர்த்தெறிந்து வெற்றி கொள்ளும்.
அன்பினால் மட்டுமே உலகத் துயரங்களை ஒரு முடிவுக்குக் கொண்டுவர முடியும்.
நமது தேவைகளை இறைவன் ஒருனால்தான் நிறைவேற்றி வைக்க முடியும்.
உள்ளத்தின் ஆழத்தில் அன்பு அமைதியாக இருக்கிறது. அதை நாம்தான் கண்டுபிடிக்க வேண்டும்.
அன்பு மனிதர்களில்மட்டும் வெளிப்படுவதில்லை. அது எங்கும் நிறைந்துள்ளது.
வாழ்க்கையின் இலட்சியம், அடையவேண்டிய குறிக்கோள் ஆகியவற்றை மறக்கக் கூடாது.
இலட்சியத்தை அடந்திடக் குறுக்கு வழி ஒன்று உள்ளது. அது உண்மையான - இடையறாத ஆர்வமே ஆகும்.
செய்யும் வேலையே உடலாகிய இறைவனுக்குச் செலுத்தும் ஒப்பற்ற பிரார்த்தனை ஆகும்.
*** அன்னை
Posted by ஞானவெட்டியான் at 7:44 AM 4 comments
Tuesday, January 17, 2006
24.யோகி ராம்சரத் குமாரின் பொன்மொழிகள்
24.யோகி ராம்சரத் குமாரின் பொன்மொழிகள்
*************************************************
அண்டப் பெருவெளியில் வேதங்கள், சாத்திரங்கள் ஆகியவை உள்ளன. தங்களுடைய தவ வலிமையால் ஞானிகள் அவற்றைத் தேடிப் பிடித்து உலகுக்கு வழங்கி உள்ளனர்.
இந்த உலகத்தில் அனைத்துமே ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையன. சூரியன், சந்திரம், மரம், வீடு, நீங்கள், நான் எல்லாமே தொடர்பு உடையவையே. இவற்றில் ஏதவது ஒன்றின் சிறு அசைவும் (மன அசைவு உட்பட) இந்த அண்டம் முழுவதும் பாதிக்கக் கூடும்.
சில மனிதர்கள்(அரசியல்வாதிகளைப்போல) அதிகம் பேசுவார்கள். கடவுள் பேசுவது இல்லை. ஆனால், கடவுள் அனைத்தையும் செய்கிறார்.
இந்தப் பிச்சைக்காரனுக்கு மிகப் பெரிய பணி தரப்பட்டு உள்ளது. தான் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியிலும் அவன் தன்னுடைய வேலையைச் செய்கிறான்.
ஒரு லட்சம் வீரர்கள் கோட்டையைத் தாக்கினாலும் ஒருவன்தான் கோட்டை மேலேறிக் கொடியைப் பறக்க விடுவான். அதைப்போல மனிதர்களில் வெகு சிலர்தான் கடவுளுக்கு அருகில் செல்கிறார்கள். அதற்கு ஆன்மிக சாதனை தேவை.
புத்தகம் படிப்பதாலோ, தவம் செய்வதாலோ ஞானம் வந்துவிடாது. அது குருவிடம் இருந்து சீடனுக்கு வரவேண்டும்.
இந்தப் பிச்சைக்காரனின் மூன்று ஞானத் தந்தைகள் நிறையவே பணி செய்தனர். அரிவந்தர் ஆரம்பித்தார்; ரமண மகரிஷி கொஞ்சம் செய்தார்; ராமதாசர் நிறைவு செய்தார்.
வேதங்கள், ஞான நூல்கள் பாதுகாக்கப்படாவிடில் இந்தியா அழிந்துவிடும். இந்திய மண்ணில்தான் வேதமும் ஞானமும் வேர் கொண்டுள்ளது.
Posted by ஞானவெட்டியான் at 9:09 PM 1 comments
Friday, January 13, 2006
Tuesday, January 10, 2006
23.நன்றி திரு.ஞானவெட்டியான்
நான் தகவல்களைத் தொடர்ந்து தர ஏதுவாக இந்த புளாக்கை வடிவமைத்துத் தந்த அண்ணன் திரு.ஞானவெட்டியான் அவர்களுக்கு என் நன்றி.
Posted by ஞானவெட்டியான் at 10:27 PM 3 comments

