10.ஷீரடி சாயிபாபாவின் அமுத மொழிகள்
**********************************************
1.என்னிடம் வருபவன், நதி கடலுடன் கலப்பதுபோல் என்னிடம் சேர்கிறான்.
2.யாகம், தியானம், தவம் ஆகியவற்றின் மூலம் கடவுளை சுலபமாக அடையலாம்.
3.ஒரு பிராணிக்கு உணவளித்து அதன் பசியைத் தணியுங்கள். என் பசி தீர்ந்துவிடும்.
4.எனது சமாதி, பக்தர்களின் தேவைகளை நிறைவேற்றும்.
5.எவன் என்னை மிகவும் விரும்புகிறானோ, அவன் என்னை எப்போதும் காண்கிறான்.
6.என்மீது உங்களின் பாரத்தை ஏற்றினால், நான் நிச்சயமாக அதைத் தாங்குவேன்.
7.என்னைச் சரணடைந்தோருக்கும் நம்புகிறவருக்கும் எப்போதும் நான் உயிரோடு இருக்கிறேன்.
8.திடமான மனதுடன் என் உதவியை நாடி வந்தால், அது உனக்கு நிச்சயம் கிடைக்கும்.
9.என் உபதேசத்துக்காக என்னை அடைந்தால், அதை உடனே நான் உனக்கு அளிப்பேன்.
10.எங்கு முழுமையான பக்தி இருக்கிறதோ, அங்கு நான் இருக்கிறேன்.
11.மந்தர் எவ்விதம் என்னை நம்புகிறார்களோ, அவ்விதமே நான் அவர்களை ஏற்றுக்கொள்கிறேன்.
12.முதலில் பசியோடு இருப்பவர்க்கு உணவளித்துப் பின் நீ உண்ணுவாயாக,
13.வேறுபாடுகளை விலக்கி, எல்லோருக்கும் சேவை செய்யுங்கள்.
14.தீமை செய்தவனைப் பழி வாங்காதீர்கள்.
15.உடலால் உலகக் கடமைகளைச் செய்யுங்கள். மனதைக் கடவுளுக்குக் கொடுத்துவிடுங்கள்.
16.நான் உங்களுடனேயே இருக்கிறேன். உங்கள் இதயமே என் இருப்பிடம்.
17.எங்கே பேராசை நிலவுகிறதோ, அங்கே கடவுள் இருப்பதில்லை.
18.அகங்காரம் மிக்கவனுக்கு குருவின் போதனைகள் கூட பயனற்றவை.
19.கடவுள் எல்லா சீவராசிகளுக்கும் வசிக்கிறார். அவரே இவ்வுலகின் மிகப்பெரிய பொம்மலாட்டக்காரர்.
20.நம்பிக்கையும் பொறுமையும் உடையவர்களை ஸ்ரீஹரி கைவிடாது காப்பாற்றுவார்.
Saturday, December 31, 2005
10.ஷீரடி சாயிபாபாவின் அமுத மொழிகள்
Posted by ஞானவெட்டியான் at 1:01 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment