Tuesday, December 27, 2005

6.முதல் காதல் கடிதம் எழுதியது யார்?

6.முதல் காதல் கடிதம் எழுதியது யார்?
***************************************
முதன் முதலில் காதல் கடிதம் எழுதியது யார் என்று பாட்டியிடம் கேட்டேன். அதற்குப் பாட்டி சிரித்துக்கொண்டே, "ஆம்பிளைக்கெல்லாம் தைரியம் இல்லை. முதன்முதலில் ஒரு பெண்தான் காதல் கடிதம் எழுதினாள்" என்றாள். அதைப்பற்றி சொல்லுங்க பாட்டி என்று நச்சரித்தபின் பாட்டி சொல்ல ஆரம்பித்தள்.

"முதன் முதலில் காதல் கடிதம் எழுதியது நம்ம ருக்மணிதான். அவதான் கிருஷ்ண பரமாத்மாவுக்கு காதல் கடிதம் எழுதினாள். என்ன எழுதினாள் தெரியுமா? கண்ணா! பெண்மைக்கு இலக்கணம் நாணம். ஆனால், நாணத்தைவிட்டு இக்கடிதத்தை எழுதுகிறேன். புருஷர்களில் உத்தமனே(புருஷோத்தமனே)!(நரசிம்ம அவதாரம் எடுத்ததால்)நீ ஒரு சிங்கம். தங்கத்தை அடைய யார் வேண்டுமானாலும் விரும்பலாம். அதுபோல நானும் உன்னை அடைய விரும்புகிறேன். உன் வீரம் உலகறிந்தது; நானும் அறிவேன். உன்னைத்தான் விவரம் அறிந்த நாளிலிருந்தே காதலிக்கிறேன். ஆயினும், இதுவரை நான் உன்னைக் கண்டதில்லை. நீயாக வந்து என்னை மணமுடிப்பாய் என்று உன்னை நினைத்துப் பல பூசைகள் செய்து வருகிறேன். நீயோ மாயன்; மாமாயன். எங்கோ மறைந்துகொண்டு என்னை ஆட்கொள்ள மறுக்கிறாய். இப்போது என்னை வேறொருவனுக்கு மணமுடிக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. இந்நிலையில், என்னால் ஒன்றும் செய்ய் இயலவில்லை. நீயே கதி. எனவேதான் நாணத்தைவிட்டு இம்மடல் விடுக்கிறேன்."

"உன்னை அடைய விரும்புகிறேன். நீயே கெதி" என்று சொன்னதுதான் தாமதம். உடனே கண்ணன் விரைந்து சென்று ருக்மணியைத் தூக்கிவந்து திருமணம் செய்துகொண்டான்.

"இதிலிருந்து என்ன தெரிந்துகொண்டீர்கள்?" என்றாள் பாட்டி. அதற்கு என் நண்பன், "அட போ பாட்டி! ருக்மணிக்கு காதல் கடிதம் எழுதவே தெரியவில்லை. கண்ணா! இன்றிரவு 12மணிக்கு வந்துவிடு. ஓடிப்போயிடலாம்" அப்பிடின்னு சுருக்கமா எழுதியிருக்கணும்" என்றான். "ஏண்டா! இந்தக்காலத்துப் பயல்களுக்குப் புத்தி இப்பிடிப் போகுது?" என்று கேட்டுவிட்டுத் தொடர்ந்தாள்.

"நம்முடைய பிரார்த்தனைகளை, நீயே கதி என்று சொல்லிவிட்டு நம் வேலைகளை நாம் பார்த்தால், நிறைவேற்றும் பொறுப்பு கண்ணனுடையது" என்று முடித்தாள்.

5 Comments:

ஞானவெட்டியான் said...

My dear PSR.Raja,
If that is so, let it be.

I request you to see the object which is being pointed out by the poiting finger and not the finger wich is pointing.

Then you will loose the Heavenly Glory.

குமரன் (Kumaran) said...

நல்ல தகவல் தங்கவேலு சார். உண்மை ருக்மிணிப் பிராட்டி தான் முதலில் காதல் கடிதம் எழுதியவர் போல. :-)

நீயே கதி என்று இருப்போம். அவன் பார்த்துக் கொள்வான். முடிந்தால் நம்ம 'கோதைத் தமிழ்' வலைப்பூவைப் பார்த்து உங்கள் கருத்துகளைக் கூறுங்கள்.

ஞானவெட்டியான் said...

ஆமாம் அய்யா,
சரணடைந்துவிட்டால் கோவிந்தன் பார்த்துக் கொள்ளுவான்.
தங்களின் பதிவுகளையும் படித்திருக்கிறேன்.
கருத்துக்களைச் சொல்லுகிறேன்.

நாமக்கல் சிபி said...

//"அட போ பாட்டி! ருக்மணிக்கு காதல் கடிதம் எழுதவே தெரியவில்லை. கண்ணா! இன்றிரவு 12மணிக்கு வந்துவிடு. ஓடிப்போயிடலாம்" அப்பிடின்னு சுருக்கமா எழுதியிருக்கணும்//

ரொம்ப தமாஷான ஆளுங்க சார் நீங்க.

ஞானவெட்டியான் said...

அது ஒண்ணும் அப்பிடி இல்லை சிபி அய்யா,

என் பேரன்(வயது 16); அவன் இதைப் படித்துவிட்டு இப்படித்தான் சொன்னான். அதையும்தான் சேர்த்துடுவொMஎ என்றுதான் நானும் ......