Thursday, January 05, 2006

16.புலியும் கடவுளும்

16.புலியும் கடவுளும்
**********************

மூன்று சீடர்கள்கள் தங்களின் குருகுலலவாசத்தை முடித்துவிட்டுத் தங்களின் ஊர் திரும்பி வந்துகொண்டிருந்தனர். வழியில் ஒரு காடு. அங்கு கொடிய மிருகங்கள் வசித்து வந்தன. கொஞ்ச தூரம் வந்ததும் தூரத்தில் ஒரு புலி வருவதைப் பார்த்தனர்.

தன்னம்பிக்கை இல்லாத முதல்வன்,"ஐய்யயோ! வரும் புலி நம்மைக் கொன்றுவிடப் போகிறது. நாம் கற்றதெல்லாம் வீணாக யாருக்கும் பயன்படாமல் போகப் போகிறதே!" என்று நினைத்து திகைத்து ஒன்றும் செய்வது அறியாமல் நின்றான்.

மூடநம்பிக்கையுடைய இரண்டாமவன்,"நாம் தரையில் படுத்துக் கண்ணை மூடிக் கடவுளை அழைப்போம். ஒரு யானை கூப்பிட்டதுக்கே ஓடி வந்து முதலையிடமிருந்து அதைக் காப்பாற்றியவர் கடவுள். அவர் கட்டாயம் வந்து காப்பாற்றுவார்" என்று படுத்துக் கொண்டான்.

முயற்சியுடைய மூன்றாமவனோ,"புலி நம்மிடம் வர கொஞ்சம் நேரம் இருக்கிறது. நம் முயற்சியால் நம்மைக் காப்பாற்றிக் கொள்ளப் பார்ப்போம். முடியவில்லை என்றால் கடவுளிடம் வேண்டுவோம். சும்மா, எல்லாக் காரியத்துக்கும் கடவுளைக் கூப்பிட்டுத் தொந்தரவு செய்யக் கூடாது. மரத்தின் மீது ஏறி உயிர் பிழைக்க முயன்று பார்ப்போம் என்று மரத்தின் மேல் ஏறிவிட்டான். ஏறும்போதே மற்ற இருவரையும் கூப்பிட்டான். மற்றவர்கள் வருவதாகத் தெரியவில்லை.

தன்னம்பிக்கை இல்லாத முதல்வனையும், மூடநம்பிக்கையுடைய இரண்டாமவனையும் புலி அடித்துவிட்டது. முயற்சியுடையவன் தப்பித்துக்கொண்டான்.

2 Comments:

குமரன் (Kumaran) said...

இதே கதையை வேறு விதமாக இராமகிருஷ்ணர் சொன்ன கதைகளில் படித்திருக்கிறேன். மதம் கொண்ட யானை ஒன்று வீதி வழி வரும்போது அதன் மேல் அமர்ந்திருக்கும் யானைப் பாகன் எச்சரித்துக்கொண்டே வருவான். யானையும் கடவுள் தானே என்று சொல்லி ஒரு மூடன் விலகமாட்டான். யானை அடித்துவிடும். மற்றவர் கேட்கும்போது அந்த மூடன் யானையும் தானும் இருவரும் கடவுள் தானே. அதனால் விலகவில்லை என்பான். அதற்கு மற்றவர் 'நல்லதப்பா. ஆனால் யானையின் மேலும் ஒரு கடவுள் உட்கார்ந்து கொண்டு எச்சரித்தானே. அதை ஏன் கேட்கவில்லை' என்பர்.

ஞானவெட்டியான் said...

சட்டியில் ஊத்தி்னால் இட்டிலி.
கல்லில் வார்த்தல் தோசை.

கதைகள் சொல்லிக் கருத்துக்களை விளங்க வைக்கும் யுக்தி.

தங்களின் கதையும் அபாரம்.