Thursday, January 05, 2006

20.வடைமாலை

20.வடைமாலை
*****************

ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்துவது எப்படி வந்தது தெரியுமா?
கல்யாணபுரம் ஆரவமுதாசாரியார் சொவதைக் கேளுங்கள்.

ராவண வதம் முடிஞ்சதும் ஸ்ரீராம பட்டாபிஷேகத்தின்போது, ஸ்ரீராமர் ஒரு முத்துமாலை வடத்தை பிராட்டியாரிடம் கொடுத்து, "யார் உனக்குப் பிரியமானவனோ, யாரிடத்தில் உனக்கு விசேஷமான அன்பு இருக்கிறதோ, அவனுக்கு இதைப் பரிசாகக் கொடு " என்றாராம். உடனே சீதா பிராட்டி அந்த மாலைவடத்தைச் சற்றும் யோசியாமல், தயங்காமல் ஸ்ரீஆஞ்சனேயர் கழுத்தில் மாலையாகப் போட்டுக்கொள்ளச் சொல்லிக் கொடுத்துவிட்டார்.

அந்த "மாலைவடம்"தான் நாளாவட்டத்தில் "வடமாலை" என்றாகி, பின்னர்,"வடைமாலை" ஆயிற்று.

2 Comments:

குமரன் (Kumaran) said...

என்னங்க ஐயா. நீங்க போற வேகத்தைப் பாத்தா இன்னும் ஒரு மாசத்துல சதம் அடிச்சுடுவீங்க போலிருக்கே. எங்களுக்குத் தான் நல்லது. நல்ல விஷயங்கள் படிக்கக் கிடைக்கிறதே.

ஞானவெட்டியான் said...

கிழவந்தானே!
நேரம் கிடைக்கிறப்ப, நெனைவு வரப்ப சும்மா தட்டி விடுறேன்.
இல்லைன்ன கப்,சிப்.