Thursday, January 05, 2006

19.ஐசுவரியம்

19.ஐசுவரியம்
***************

தவத்திரு கிருபானந்த வாரியார் ஒருமுறை சுருளிமலை வேலப்பர் கோவிலுக்குத் தன் பக்தர்களுடன் சென்றிருந்தார். அருகே உள்ள பளிங்கு போன்று தெள்ளத்தெளிந்த நீர் கொட்டும் நீர்வீழ்ச்சியைக் கணடனர். அனைவரும் நன்கு நீராடினர். பின்னர் கிருபானந்த வாரியாரிடம் அனைவரும் திருநீறு வாங்கி அணிந்துகொண்டனர்.

அப்போது, கிருபானந்த வாரியார் வந்திருக்கிறார் என்னும் செய்தி கேட்டு திடுதிடுவென மலைவாசிகள் முண்டியடித்துக்கொண்டு வந்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த பக்தர்கள் மிகச் சிரமப் பட்டனர். அப்போது ஒரு மலைவாசி,"ஏஞ்சாமி தள்ளுற! நாங்க சாமிக்கிட்ட ஒவ்வொருத்தரா "ஐசுவரியம்" வாங்கிகிட்டுப் போயிடுறோம்" என்றான்.

இகழ்ச்சியாகப் பார்த்த பக்தகோடிகளில் ஒருவர்,"வந்திருப்பவர் கிருபானந்த வாரியார் சாமிகள். அவரிடம் ஐசுவரியம் ஏதுமில்லை" என்றார்.

உடனே, வாரியார் சுவாமிகள் ஒவ்வொருவராகக் கூப்பிட்டுத் திருநீறு தந்தனுப்பினார். பின்னர், பக்தகோடிகளிடம், "ஐசுவரியம்" என்றால் பொன் பொருளல்ல; "திருநீறு"தான்.

"அவர்களுக்குத் தெரிந்து உங்களுக்குத் தெரியவில்லை என்றார்."

0 Comments: