Thursday, January 19, 2006

26. அன்னையின் பொன்மொழிகள்

26. அன்னையின் பொன்மொழிகள்
*************************************

நீங்கள் செய்யும் தொழில்கள் அனைத்திலும் மகிழ்ச்சி கொள்ளவேண்டும்.

எப்படி வாழ்வது என்பது தெரிந்துவிட்டால், வாழ்க்கை முழுவதும் அன்பு மயமாகும்.

எப்படிப்பட்ட சூழ்நிலயிலும் அமைதி காத்திட வேண்டும். அதுதான் சிறந்தது.

இந்தியா உலகத்தின் குரு. வருங்கால உலகம் இந்தியாவைச் சார்ந்தே உள்ளது.

அற்புதமான பேச்சைவிட, ஒரு துளி அன்பினால் அதிகம் சாதிக்க முடியும்.

எதிலும் தீமையைப் பார்க்கிற பழக்கத்தையும், குற்றம் காணும் குணத்தையும் தவிற்க வேண்டும்.

உண்மையான அன்பு, எல்லாத் தடைகளையும் குறைபாடுகளையும் தகர்த்தெறிந்து வெற்றி கொள்ளும்.

அன்பினால் மட்டுமே உலகத் துயரங்களை ஒரு முடிவுக்குக் கொண்டுவர முடியும்.

நமது தேவைகளை இறைவன் ஒருனால்தான் நிறைவேற்றி வைக்க முடியும்.

உள்ளத்தின் ஆழத்தில் அன்பு அமைதியாக இருக்கிறது. அதை நாம்தான் கண்டுபிடிக்க வேண்டும்.

அன்பு மனிதர்களில்மட்டும் வெளிப்படுவதில்லை. அது எங்கும் நிறைந்துள்ளது.

வாழ்க்கையின் இலட்சியம், அடையவேண்டிய குறிக்கோள் ஆகியவற்றை மறக்கக் கூடாது.

இலட்சியத்தை அடந்திடக் குறுக்கு வழி ஒன்று உள்ளது. அது உண்மையான - இடையறாத ஆர்வமே ஆகும்.

செய்யும் வேலையே உடலாகிய இறைவனுக்குச் செலுத்தும் ஒப்பற்ற பிரார்த்தனை ஆகும்.

*** அன்னை

4 Comments:

ஞானவெட்டியான் said...

From: பரஞ்சோதி paransothi2004@yahoo.com
Date: Jan 21, 2006 11:38 AM
Subject: [அன்னையின் பொன்மொழிகள்] 1/21/2006 11:03:26 AM
To: thakavalkal@gmail.com

அன்பர் தங்கவேலுக்கு பாராட்டுகள்.

உங்கள் எழுத்துப்பணி தொடரட்டும்.

டிபிஆர்.ஜோசப் said...

தங்கவேலு,

தங்களுடைய பதிவை தினமலர் இரண்டாம் முறையாக பாராட்டியுள்ளதை இப்போதுதான் பார்த்தேன்.

பாராட்டுகள்.. தொடர்ந்து எழுதுங்கள்.

ஞானவெட்டியான் said...

G.Ragavan has left a new comment on your post "தகவல் தங்கவேலுவுக்குப் பாராட்டு":

தங்கவேலுவுக்கு எனது வாழ்த்துகள். பாராட்டை தங்கவேலுவுக்கும் அனுப்புவோம். இங்கும் இடுவோம். :-)

நாகன் said...

அன்பு அய்யா,
வாழ்த்த வயது இல்லை. பாராட்டுகிறேன்
அன்புடன்,
நாகன்