Tuesday, January 17, 2006

24.யோகி ராம்சரத் குமாரின் பொன்மொழிகள்

24.யோகி ராம்சரத் குமாரின் பொன்மொழிகள்
*************************************************

அண்டப் பெருவெளியில் வேதங்கள், சாத்திரங்கள் ஆகியவை உள்ளன. தங்களுடைய தவ வலிமையால் ஞானிகள் அவற்றைத் தேடிப் பிடித்து உலகுக்கு வழங்கி உள்ளனர்.

இந்த உலகத்தில் அனைத்துமே ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையன. சூரியன், சந்திரம், மரம், வீடு, நீங்கள், நான் எல்லாமே தொடர்பு உடையவையே. இவற்றில் ஏதவது ஒன்றின் சிறு அசைவும் (மன அசைவு உட்பட) இந்த அண்டம் முழுவதும் பாதிக்கக் கூடும்.

சில மனிதர்கள்(அரசியல்வாதிகளைப்போல) அதிகம் பேசுவார்கள். கடவுள் பேசுவது இல்லை. ஆனால், கடவுள் அனைத்தையும் செய்கிறார்.

இந்தப் பிச்சைக்காரனுக்கு மிகப் பெரிய பணி தரப்பட்டு உள்ளது. தான் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியிலும் அவன் தன்னுடைய வேலையைச் செய்கிறான்.

ஒரு லட்சம் வீரர்கள் கோட்டையைத் தாக்கினாலும் ஒருவன்தான் கோட்டை மேலேறிக் கொடியைப் பறக்க விடுவான். அதைப்போல மனிதர்களில் வெகு சிலர்தான் கடவுளுக்கு அருகில் செல்கிறார்கள். அதற்கு ஆன்மிக சாதனை தேவை.

புத்தகம் படிப்பதாலோ, தவம் செய்வதாலோ ஞானம் வந்துவிடாது. அது குருவிடம் இருந்து சீடனுக்கு வரவேண்டும்.

இந்தப் பிச்சைக்காரனின் மூன்று ஞானத் தந்தைகள் நிறையவே பணி செய்தனர். அரிவந்தர் ஆரம்பித்தார்; ரமண மகரிஷி கொஞ்சம் செய்தார்; ராமதாசர் நிறைவு செய்தார்.

வேதங்கள், ஞான நூல்கள் பாதுகாக்கப்படாவிடில் இந்தியா அழிந்துவிடும். இந்திய மண்ணில்தான் வேதமும் ஞானமும் வேர் கொண்டுள்ளது.


1 Comment:

ஞானவெட்டியான் said...

அன்பு தங்கவேலு,
சின்னஞ்சிறு வாக்கியங்களானாலும், அதனுள் பொதிந்துள்ள அருத்தங்கள் ஏராளம்.
தொடர்ந்து இதுபோல் பயனுள்ள தகவல்களைத் தாருங்கள்.