Saturday, January 21, 2006

28. தமிழ்மணத்துக்கு தங்கவேலுவின் நன்றி

28. தமிழ்மணத்துக்கு தங்கவேலுவின் நன்றி
*********************************************

அன்பு நண்பர்களே,
என்னுடைய வலைப்பூவைப் பற்றி இரண்டாம் முறையாகத் தினமலரில் வெளியான செய்தி.


இதுவும், அண்ணண் திரு.ஞானவெட்டியான் அவர்கள் சொல்லியபின்தான் எனக்குத் தெரியும். அவர்கள் 1988ல், கரூர் வங்கியில் களப் பணியாளராக இருந்தபொழுது என் பெட்டிக் கடையில்தான் புத்தகங்கள் வாங்குவார். அவர்தான் எனக்கு ஊக்கம் கொடுத்து, வலைப்பூவுக்குள் இழுத்து விட்டவர். அவருக்கு முதலில் நன்றி.

இரண்டாவதாக, தமிழ்மணம் இல்லையென்றால், இது தினமலரின் பார்வைக்குப் போயிருக்குமா? சந்தேகம்தான். அதனால், தமிழ்மணத்துக்கும், கணினி சிக்கல்களில் மாட்டி இருந்தபோது ஆலோசனை சொல்லி உதவி செய்த நண்பர் திரு.காசி அவர்களுக்கும் என் நன்றி.

15 Comments:

ஞானவெட்டியான் said...

அன்புத் தம்பி தங்கவேலு,

பெட்டிக் கடை வைத்திருந்தபோது பொத்தகங்கள் படித்துச் சேமித்திருக்கும் தகவல்களை அள்ளி வீசுங்கள்.
மக்களுக்கும் உதவியாயிருப்போமே!
வாழ்டததுகளும், பராட்டுக்களும்.

சிறில் அலெக்ஸ் said...

வாழ்துக்கள்

நாமக்கல் சிபி said...

தகவல் தங்க வேலு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

//பெட்டிக் கடை வைத்திருந்தபோது பொத்தகங்கள் படித்துச் சேமித்திருக்கும் தகவல்களை அள்ளி வீசுங்கள்.
மக்களுக்கும் உதவியாயிருப்போமே!//

நிச்சயமாய் உங்கள் தகவல்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

நன்றி.

குமரன் (Kumaran) said...

வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் தங்கவேலு ஐயா.

இரண்டு முறை என்ன? இன்னும் நிறைய தடவை உங்கள் வலைப்பதிவு பற்றி தினமலரில் செய்தி வரும் என்று எண்ணுகிறேன்.

ஞானவெட்டியான் said...

அன்புத் தம்பி சிறில் அலெக்ஸ்,
மிக்க நன்றி

ஞானவெட்டியான் said...

அன்புத் தம்பி நாமக்கல் சிபி,
நீங்கள் நாமக்கல்லிலா வசிக்கிறீர்கள்.
மிக்க நன்றி

ஞானவெட்டியான் said...

அன்புத் தம்பி குமரன்,
மிக்க நன்றி

Thekkikattan|தெகா said...

அன்பு தங்கவேலு ஐயா, தாங்களின் கருத்துக்கள் எச் சமயத்தில் யாருக்கு எப்படி உதவியாக இருக்கும், இருந்து கொண்டிருக்கிறது என்பது உங்களின் பார்வைக்கு அப்பார்பட்டது எனினும் எனை போன்ற வளரும் அன்பர்களுக்கு நிறையவே உங்களுடைய வாழ்வியல் புரிதல்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்வதால் பயனளிக்கும் என்பதில் சிறிதும் ஐயம் வேண்டாம், சிறக்க உமது பொது நலப் பணி.

இச் சமயத்தில் தாங்களை வலைபூவிற்கு அறிமுகப் படுத்திய ஐயா, ஞனாவெட்டியான் அவர்களுக்கும் நன்றி.

அன்புடன்,

தெகா.

ஞானவெட்டியான் said...

அன்பு தெக்கிக்காட்டான்,
அவரில்லையேல் நானில்லை. விளக்கமாகச் சொல்வதை அவர் விரும்பமாட்டார்.
அவருக்கும் நன்றி. உங்களுக்கும் நன்றி.

நாகன் said...

இரண்டாவது முறையாக உங்களின் எழுத்துக்களுக்குத் தினமலரின் பாராட்டுக்கள்!
என்னுடையதும் தான்.

ஞானவெட்டியான் said...

மிக்க நன்றி அய்யா.

நாமக்கல் சிபி said...

அன்பு அண்ணன் தங்கவேல் அவர்களுக்கு,

நான் பிறந்து, வளர்ந்து, படித்தது நாமக்கல்லில். கடந்த ஐந்தாண்டுகளாக
சென்னையில் வசித்திவிட்டு, தற்போது கோவையில் வசித்து வருகிறேன்.

ஞானவெட்டியான் said...

அன்புள்ள சிபி,
கோவையிலா இருக்கிறீர்கள்.
நல்லது.
அண்ணண் ஞானவெட்டியான் 27ம் தேதி PSG மருத்துவமனைக்கு காளை 10மணிக்கு வருகிறார். அனேகமாக, நானும் வரலாம். முடிந்தால் அங்கு சந்திப்போம்.
ஞானவெட்டியான் அண்ணனில் செல் நம்பர்: 94421 90440

G.Ragavan said...

வாழ்த்துகள் தங்கவேலு.

ஞானவெட்டியான் said...

மிக்க நன்றி, ராகவன் சார்.