Monday, January 23, 2006

29. பற்றுக பற்றற்றான் தாளினை

29. பற்றுக பற்றற்றான் தாளினை
************************************
ஓர் முனிவருக்கு 5 சீடர்கள். கற்றுக்கொள்ளவேண்டியதை எல்லாம் கற்றுக்கொண்டபின் ஒரு சீடனுக்கு ஒரு ஐயம். அதை முனிவரிடமே கேட்டுவிடுவதென நினைது,"குருவே! இறைவன் மீது பற்று வைத்தால் மற்ற பற்றுக்கள் எல்லாம் தளர்ந்துவிடும் என்றீர்கள். அது எப்படடி?" என்றான்.

அதற்கு முனிவர் புன்னகைபூத்து,"அதோ, அந்த விறகுக் கட்டைக் கொண்டுவா" என்றார். பின்னர்,"இக்க்ட்டின்மீது இன்னொரு கயிறால் இறுகக் கட்டு என்றார்". சீடனும் அங்ஙனமே நன்றாக இறுகக் கட்டினான். பின்னர் முனிவர்,"இப்போது னுதலில் கட்டியிருந்த கயிற்றைப் பார்" என்றார். சீடன் கட்டு தளர்ந்திருப்பதைக் கண்டான்.

இதேபோல்தான், இறைவன் மீது பற்று என்னும் கட்டினை இறுக்கும்போது, பந்தம் முதலான கட்டுக்கள் எல்லாம் தளர்ந்துவிடும்" என்றார். ஐயம் தெளிந்த சீடனும் மகிழ்ந்தான்.

7 Comments:

குமரன் (Kumaran) said...

ஆஹா. அருமையான கதை தங்கவேலு சார். இதுவரை இவ்வளவு எளிமையாக இந்த விசயத்தை யாரும் எனக்குக் கூறியதில்லை. மிக்க நன்றி.

ஞானவெட்டியான் said...

அய்யா குமரன்,
நன்றி.

Thekkikattan|தெகா said...

எளிமையான கதையின் மூலம் மிக ஆழமான கருத்தை விளக்குவதாக அமைந்திருக்கிறது. நன்றி தங்கவேலு ஐயா.

தெகா.

ஞானவெட்டியான் said...

அன்பு தெகா,

தங்களின் கருத்துக்கு நன்றி.

பரஞ்சோதி said...

எளிமையான கதை, ஆழமான கருத்துக்களை இவ்வாறு எளிமையாக சொன்னால் குழந்தைகளுக்கு உடனே புரிந்து கொள்வார்கள்.

ஒரு கோட்டை அழிக்காமல் சிறிதாக்குவது எப்படி என்று ஒண்ணாம் வகுப்பில் ஆசிரியர் சொன்னது இன்னமும் நினைவில் இருக்குது தானே.

ஞானவெட்டியான் said...

அய்யா பரஞ்சோதி,
நன்றி.

நாகன் said...

அய்யா, நீங்கள் கதை சொல்லும் முறை என் 7 வயது பேத்திக்குக்கூட சட் என்று விளங்கி விட்டது. நன்றி.