Monday, March 13, 2006

அமரர் தகவல் தங்கவேலு

அமரர் தகவல் தங்கவேலு
*****************************

தமிழ் பணிசெய்த கரம்
தன் பணி முடிந்த தென்று
விடல்தனை முடக்கிக் கொண்டு
வீடு சென்றதோ!

சென்ற திசை நோக்கி என் வணக்கம்.

- DR.R.Vasudevan

கரூருக்கு அருகில் கொடுமுடியில் 1946ம் ஆண்டு ஒரு எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். SSLC வரை படித்தார். பின்னர் தந்தை இறந்ததும் அண்ணனுக்குத் தன் பங்கான 2காணி நிலத்தை விட்டுக்கொடுத்துவிட்டு 10,000 உரூபாயுடன் கரூருக்குப் பிழைக்க வந்தார். 1967ல் கரூர்வந்து ஊர்க்கோடியில் ஒரு பெட்டிக்கடை வைத்தார்.

அப்போது அவர் மளுக்கு 3வயது; மகனுக்கு 1வயது. 1980ல் வையாபுரிநகர் என்னும் காலனியில் அதே பெட்டிக்கடையை மாற்றினார். STATE BANK OF INDIAவில் ஒரு சேமிப்புக்கணக்கு ஒன்று வைத்திருந்தார். 1984ல் தன் மைத்துனனுக்கே தன் மகளை எளிய முறையில் திருமணம் செய்து வைத்தார். மைத்துனன் சேனைப்படையில் ஒரு ஹவில்தார். ராஜஸ்தானில் இருக்கிறார்.1987ல் மனைவியின் மறைவு அவருக்குத் தாளவியலா அயர்வைத் தந்தது.

1988ல் களப்பணி அதிகாரியாக நான் கரூர் சென்றேன். அங்குதான் அறிமுகமானார் தங்கவேலு. அவரின் கடையைத் தாண்டித்தான் நான் என் வீட்டிற்குச் செல்லவேண்டும். ஆகவே, தாளிகைகள் வாங்குவதெல்லாம் அவர் கடையில்தான். அவரிடம் என்னை ஈர்த்தவை இரண்டு. சோம்பலற்ற கடின உழைப்பும் தமிழின்பால் அவர் வைத்திருந்த பற்று.

உரையாடும்போதெல்லாம் அவர் உதிர்க்கும் பொன்மொழிகளும், சொற்றொடர்களும் என்னை வியக்க வைக்கும். அப்பொழுதுதான், தங்கம் இந்த நாட்குறிப்புக்களில் நீங்கள் படித்த தகவல்களையெல்லாம் குறித்து வையுங்களேன்; மற்றவருக்குப் பயன்படுமே என்றேன். சொன்னதைத் தவறாமல் செய்து வைத்தார். நானும் அவ்வப்போது வாங்கிப் படிப்பது வழக்கம்.

கடையை விரிவாக்க 10,000 உரூபாய் கடன் வங்கியில் வாங்கித் தந்தேன். அவரும் தவறாது தவணைப் பணம் செலுத்தி விடுவார். அப்போழுதுதான் சோதனை ஆரம்பமாகியது.தனது படிப்பை முடித்த தன் மகனைக் கடையில் வைத்துச் சென்றபோதெல்லாம் கையிருப்பு குறைய ஆரம்பித்தது. மகனும் இரவு நேரங்களில் குடித்துவிட்டு அலைய ஆரம்பித்தான். 1991ல் கடையை மூடவேண்டிய சூழ்நிலை வந்தது. கடன் பாக்கி 4,000 உரூபாய் இருந்தது. அப்பொழுதும்கூட தகவல் சேகரிப்பை விடவில்லை. நூலகம் சென்று படித்து குறித்து வைப்பார்.

அந்த காலகட்டத்தில், 1994ல் கடன் இரத்து செய்யும் திட்டம் வந்தது. நிலைமையை எனது மூத்த அதிகாரியிடம் விளக்கிக் கூறி கடனை இரத்து செய்து கொடுத்தேன். ஒரு ஆடை நெய்யும் கம்பனியில் கணக்கப் பிள்ளை வேலை வாங்கிக் கொடுத்தேன்.

"பெட்டியிலே பணமில்லே; பெத்த புள்ள சொந்தமில்லே" என்று மகனும் ஒரு பெண்ணைக் காதலித்து மணந்து தனியே சென்றுவிட்டான்.

காலத்தைத் தனியே ஓட்டிவந்த தங்கவேலுவை என் நண்பனின் இல்லத்தில் தங்க வைத்தேன். அவர் கணினி வைத்து data processing செய்து வருகிறார். அங்கேயே படுக்கை. அப்போதுதான் கணினி பயன்பாட்டை விளக்கி வலைப்பூ பதியச் சொன்னேன். அங்குள்ள நண்பனின் மகன் உதவி செய்தான். அதில் நிம்மதி கண்டார் தங்கவேலு.

அந்த நிம்மதியிலேயே, நிரந்தர நிம்மதி அடைந்துவிட்டார். அமரரானார்.

இரங்கல் செய்திகள்
***********************
At 11:58 PM, குமரன் (Kumaran) said...

மிக்க வருத்தம் தரும் செய்தி. தகவல் தங்கவேலு அவர்களின் வலைப்பதிவுகளைத் தவறாமல் படித்து வந்தேன். அவரின் ஆன்மா நிறைநிலையை எய்த ஆண்டவனை வேண்டுகிறேன்.

நெருநல் இருந்தார் இன்றில்லை என்னும் பெருமை
உடைத்திவ்வுலகு.

At 12:16 AM, abiramam said...

Its very sad to hear this news. May ALIMIGHTY rest his soul in Peace..

At 12:39 AM, Agent 8860336 ஞான்ஸ் said...

திரு.தங்கவேலு அவர்களின் கும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

At 12:52 AM, Geetha Sambasivam said...

Migavum varuthamana eithi. Avarin Kudumbathirku enathu Azhntha anuthapangal.

At 12:57 AM, முகமூடி said...

மனதிற்கு பாரமான செய்தி. அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

At 1:47 AM, பரஞ்சோதி said...

அதிர்ச்சியான செய்தி, மனம் வருந்துகிறது.

அய்யா தங்கவேலு அவர்களின் வலைப்பதிவுகளை படித்து வந்த வாசகரின் நானும் ஒருவன்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய இரங்கல்கள்.

At 2:04 AM, அனுசுயா said...

மிகவும் அதிர்ச்சியான தகவல். அன்பரே சரியாக அவர் என்று இறந்தார் எனச் சொல்ல இயலுமா..? ஒரு சில குழப்பங்கள் காரணமாக இதனைக் கேட்கிறேன்.

At 2:34 AM, நாமக்கல் சிபி said...

தமிழ் பணிசெய்த கரம்
தன் பணி முடிந்த தென்று
விடல்தனை முடக்கிக் கொண்டு
வீடு சென்றதோ!

சென்ற திசை நோக்கி என் வணக்கம்.

- DR.R.Vasudevan


தகவல் தங்கவேலு என்று பல தகவல்களை தந்த அன்னாரின் பணி மிகவும் பாராட்டத்தக்கது.
எந்த ஒரு பயனையும் கருதாமல் அவர் செய்த பணி பெருமைக்குறியது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.


- மஞ்சூர் ராசா


வருந்தத்தக்க செய்தி :(
அண்ணாரின் குடும்பத்திற்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல், ஞானம் ஐயாவிடம் பேசி வெகுநாட்களாகின்றன, இன்று இரவு பேச முயற்சிக்கின்றேன்.

- சிவா

விண்ணிலே
தமிழ் பற்றாக்குறையென்று
வானுலகு
வாரியணைத்துக்கொண்டதோ
உன்னை
உன்னிலே
தமிழ் கண்டு...
எங்கள்
தங்கத்தமிழனே
தங்கவேலுவே!
நின் புகழ்
நீடு வாழ்கவே!

ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கும்

- இரா.பாலகுமார்

அய்யாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

- விகே.பெரியசாமி.

முத்தமிழ்க் குழுமத்திலிருந்து.

At 3:05 AM, Karunaa said...

எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவிக்கிறேன் குமரன்.அவரது குடும்பத்தாருக்கு எனது அனுதாபத்தைச் சொல்லிகிடுறேன்!

At 4:10 AM, கைப்புள்ள said...

மிகவும் வருத்தம் தரும் செய்தி. அன்னாருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி அவர்தம் குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

At 4:20 AM, முத்துகுமரன் said...

மிகவும் அதிர்ச்சிகரமான செய்தி. அவர் பதிவை ஒரே ஒரு முறை கடந்திருக்கிறேன். அவரது மரைவுற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த துயரத்திலிருந்து மீண்டு வரும் வல்லமையை அன்னாரது குடும்பத்தாருக்கு இறைவன் அருள வேண்டும்.

At 4:32 AM, நாமக்கல் சிபி said...

//அன்பரே சரியாக அவர் என்று இறந்தார் எனச் சொல்ல இயலுமா..? //

அனுசுயா! அவர் 11/03/2006 அன்று காலை இறந்தார். இது பற்றிய ஐயா ஞானவெட்டியான் அவர்களின் பதிவைப் பார்க்க இப்பதிவில் இருக்கும் மேலும் விவரங்கள் என்ற சுட்டிக்குச் செல்லவும்.

At 4:46 AM, geethusadhu said...

திரு.தங்கவேலு அவர்களின் கும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

At 5:52 PM, துளசி கோபால்சொல்லுவது என்னவெனில் ...

அன்னாரின் ஆத்மா சந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம்.

At 6:36 PM, சிவனடியார்சொல்லுவது என்னவெனில் ...

மறைந்த அண்ணார் தங்கவேலு அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். கும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

At 6:43 PM, தமிழ்பயணிசொல்லுவது என்னவெனில் ...

தங்கவேலு அவர்களின் மறைவால் வாடும் அவர் குடும்பத்தினரக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

At 7:14 PM, Thekkikattanசொல்லுவது என்னவெனில் ...

ஐயா, இச் செய்தியை கேட்டதும் மிகவும் மனது வாடிப்போனது. அன்னாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டிக்கிறேன். அவர்களின் குடும்பாத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்ளும். தெகா.

At 7:37 PM, Dharumiசொல்லுவது என்னவெனில் ...

அவர் பிரிவால் துன்புறும் அவர்தம் குடும்பத்தினருக்கும், ந்ல்ல நண்பரை, தம்பியை இழந்து நிற்கும் உங்களூக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்

At 7:41 PM, Ennarசொல்லுவது என்னவெனில் ...

மறைந்த தங்கவேலு அவர்களின் ஆன்மா சாந்தியடை வேண்டுகிறேன்.
அவருக்கு உடல் நிலையில் என்ன காரணம்
அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இறங்களைத்தெரிவித்துக்கொள்கிறேன்.

At 7:43 PM, அப்டிப்போடு...சொல்லுவது என்னவெனில் ...

மிகவும் வருத்தமாக உள்ளது. அவர் குடும்பத்தார்க்கு என் அனுதாபங்கள். அருகில் இருந்து ஆறுதல் கொடுங்கள்.

At 7:55 PM, பரஞ்சோதிசொல்லுவது என்னவெனில் ...

அய்யா,

செய்தி படித்து மனம் வருந்துகிறேன்.

கடைசி நேரத்திலும் மற்றவர்களுக்கு பயன்பட வேண்டும் என்ற மகத்தான எண்ணத்தை கொண்ட அய்யா தங்கவேலு மிகப்பெரிய மகான்.

அன்னாரின் ஆத்மா இறையனடி சேர இறைவனை வேண்டுகிறேன், குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.

At 9:10 PM, AJeevanசொல்லுவது என்னவெனில் ...

அன்னாரின் ஆத்மா சந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம்.

முகம் தெரியாத உறவாக இருந்தாலும் செய்தியை படித்ததும் மனதுக்குள் வேதனை கொப்பளிக்கிறது.
இது உணர்வுகளால் ஏற்பட்ட உந்துதலா?

அவரது பிரிவில் துயருறும் அன்னாரது குடும்பத்தினரோடு நாமும் அத் துயரை பகிர்ந்து கொண்டு
அன்னாரது மறைவால் வாடும் அவர் குடும்பத்தினரக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

At 9:19 PM, AJeevanசொல்லுவது என்னவெனில் ...

முகம் தெரியாவிடினும்
எழுத்தால் நம்மோடு வாழ்ந்த ஒரு உறவை பிரிந்த செய்தி கேட்டமதும் என் இதயம் ஒரு கணம் நின்று துடித்ததே..........
இது மானசீக உறவா ஐயா?

உங்கள் இழப்பில் வருந்தும் உறவுகளோடு உங்கள் பக்கம் நின்று ஆறுதல் சொல்ல முடியாத தூரத்தில் இருக்கிறேன்.

உங்கள் ஆன்மா அமைதியாய் இறைவனடி சேர பிராத்திக்கிறேன்.

உங்கள் உறவாய் என் ஆழ்ந்த அனுதாபங்கள் உங்கள் குடும்பத்தினருக்கு........

அஜீவன்
சுவிஸ்

At 9:24 PM, AJeevanசொல்லுவது என்னவெனில் ...

தங்கள் பிரிவுச் செய்தி கேட்டதும்
என் இதயம் ஒரு கணம் நின்று துடித்ததே ஐயா?
இதுதான் மானசீக உறவா?

ஒரு சில முறைகள் உங்கள் வலைப்பின்னலுக்குள் சிக்கியிருக்கிறேன்.

இன்று?

உங்கள் இழப்பில் உங்கள் குடும்பத்தினருடன்
இணைந்து துயரை பகிர்ந்து கொள்கிறேன்.

உங்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

At 11:19 PM, செல்வன்சொல்லுவது என்னவெனில் ...

மிகவும் மனம் வருந்துகிறேன் பெரிய ஞானி ஐயா.தங்கவேலு ஐயா அவருக்கு பிடித்த இறைவன் திருப்பாதத்தை அடைந்து விட்டார்.நமக்காக அங்கிருந்து இறைவனை வேண்டுவார் என்பதில் ஐயமில்லை.

அவரது வாழ்க்கை குறிப்பை முடிந்தால் வலையில் இடுங்கள்.அவரை பற்றி முழுதாக அறிந்துகொள்ள எங்களுக்கு உதவியாக இருக்கும்.

At 1:40 AM, Idly Vadaiசொல்லுவது என்னவெனில் ...

ஐயா,
வருத்தமாக உள்ளது. அவர் குடுபத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

At 7:07 AM, மூர்த்திசொல்லுவது என்னவெனில் ...

அன்பின் ஞானம் அய்யா,

தங்கவேலு அய்யாவுடன் அவ்வளவு அதிகப் பழக்கம் இல்லை என்றாலும் அவரின் வலை படித்து மகிழ்ந்து இருக்கிறேன். அன்னாரின் தகவல்களை பயன்படுத்திக்கொள்ள அனுமதிகூட கேட்டு இருந்தேன். நல்ல பல அரிய தகவல்களை வாரி வழங்கிக் கொண்டிருந்த அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.

At 7:20 AM, SKசொல்லுவது என்னவெனில் ...

என் மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழுலகத்திற்கு அவர் ஆற்றிய சேவை மகத்தானது

At 7:20 AM, மதி கந்தசாமி (Mathy)சொல்லுவது என்னவெனில் ...

என் ஆழ்ந்த அனுதாபங்கள். குடும்பத்தாருக்கு என் ஆறுதலைத் தெரிவித்து விடுங்கள் ஐயா.

http://thakavalkal.blogspot.com - had to search in thamizmanam for the links. thought it would be useful to people.

-மதி

At 9:47 AM, சிவமுருகன்சொல்லுவது என்னவெனில் ...

மறைந்த அண்ணார் தங்கவேலு அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.அவர்தம் பிரிவால் துன்புறும் குடும்பத்தினர், நன்பரை, தம்பியை இழந்து நிற்கும் உங்களூக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

1 Comment:

இரா.ஜெகன் மோகன் said...

தமிழ் வலையுலகம் - இன்று
தடுமாறித்தான் போனது!

பெரியதொரு குடும்பத்தில்
இனியதொரு உறவை - இன்று
இழந்து தவிக்கிறது!

தகவல் சொத்து
தந்து விட்டு சென்றீர்!
இன்றைய தலைமுறைக்கு!
உம் இருப்பை திரும்ப
யார் தருவர் எமக்கு?

கண்ணீர் அஞ்சலியே
எங்கள் காணிக்கைச் சமர்ப்பணம்!
வேறென்ன!
உம் ஆத்மா
உறையும் இறவனிடம்!
இதுவே இறவனிடம்
எங்கள் விண்ணப்பம்!