Tuesday, April 13, 2010

யாரோ சொன்னது - 21 - 30

21. உன்னுடைய விருப்பங்கள் மகிழ்ச்சி தருவதில்லை; பிறர் உன்னை விரும்புவதே மகிழ்ச்சி தரும்.

22. "பண்போடு பொருந்தாத அனுதாபம் எல்லாம் மறைமுகமான் தன்னலமேயாகும்."

23. "உழைப்புதான் ஒரு மனிதனை மற்றொருவனைவிட முந்தச் செய்கிறது."

24. "நாளைய நன்மைக்காக இன்றைய தேவைகளைக் குறைத்துக் கொள்."

25. "சீரிய எண்ணங்களைச் செயல்படுத்தும்பொழுது அவை சிறந்த செயல்களாகின்றன."

26. "உடல் நலமுள்ளவனுக்கு நம்பிக்கை இருக்கும்; நம்பிக்கை உள்ளவனுக்கு எல்லாம் இருக்கும்."

27. "மன உறுதியைப்போல் உழைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம்."

28. "உண்பதற்காக வாழாதே! வாழ்வதற்காக உண்."

29. "நட்பு உண்டாக அன்பு மட்டும் போதாது; இலட்சிய ஒற்றுமையும் வேண்டும்."

30. "எழுதுவது அருமை; எழுதியதைப் பழுதறக் கற்றல் அதிலும் அருமை; அதன்படி நடத்தல் அருமையோ அருமை."

3 Comments:

ஞானவெட்டியான் said...

நன்றி

முனைவர் இரா.குணசீலன் said...

"உடல் நலமுள்ளவனுக்கு நம்பிக்கை இருக்கும்; நம்பிக்கை உள்ளவனுக்கு எல்லாம் இருக்கும்."


மிகவும் நன்றாகவுள்ளது.

ஞானவெட்டியான் said...

மிக்க நன்றி, ஐயா