Friday, April 16, 2010

யாரோ சொன்னது - 31 - 40



31."மலையைக் கடுகாக நினைத்தால் வெற்றி நிச்சயம். கடுகைக்கூட மலையாக நினைத்தால் தோல்வியே மிஞ்சும்."

32."இயற்கை, பொறுமை, காலம் ஆகியவைகள்தான் மூன்று சிறந்த மருத்துவர்கள்."

33."செயல்களைக் கடுமையாக்குவது சோம்பேறித்தனம்; அவைகளை எளிமையாக்குவது உழைப்பு."

34."வியப்பு புகழும்; அன்பு ஊமையாய் இருக்கும்."

35."அடிக்கடி கோபம் கொள்ளாதே; அது உன் அழிவுக்கு வழி வகுக்கும்."

36."விரைவில் உயர்வது பெரியது அல்ல. எப்பொழுதும் உயர்ந்தபடி இருக்கவேண்டும். அதுவே பெரிது."

37."ஒருவன் எந்த மனிதனுக்கு அஞ்சுகிறானோ அவனை நேசிப்பதில்லை."

38."மலை புயலுக்கு அசைந்து கொடுப்பதில்லை; அறிவாளி புகழ்ச்சிக்கு அடிமையாவதில்லை."

39."உண்மையான அறிவாளி(அனைவரும்) தன் இரகசியத்தைத் தானே வைத்துக்கொள்ள வேண்டும்."

40."எப்பொருளிலும் யாரிடத்தும் ஒருபோதும் பற்றுதல் வைக்காதே."

உலவு.comல் ஏகப்பட்ட விதிகள் உள்ளனபோலும். எப்பொழுது பார்த்தாலும் கீழிருக்கும் "தப்பு" செய்தி வருகிறது. ஆகவே உலவு உலவியில் இடமுடியவில்லை.

0 Comments: