தமிழகத்தின் காவிரிப் படுகைகளில் கடும் மழையால் வெள்ளம் பெருக்கோடியது. ஊர் மக்கள் அனைவருக்கும் பீதியும், சோகமும். ஆயினும் ஒரு சாரார், இதனால் வரும் நிவாரணத்தில் நமக்கு எவ்வளவு கிடைக்கும் என்று கணக்கிட்டுக் கொண்டிருந்தனர். வந்தது நிவாரண நிதி. எங்கு சென்றது அவ்வளவும். யாருக்குத் தெரியும். மக்களிடமிருந்து நிம்மதியற்ற கூச்சலும் ஓலமும்தான் கேட்கின்றன.
அதோடு, இன்னுமொரு செய்தி. மழைவெள்ளத்தால் அடித்துவரப்பட்ட மணல் எவ்வளவு தெரியுமா? சுமார் 50 இலட்சம் டன் இருக்குமாம். ஒரு டன் மணல் இப்பொழுது ரூபாய் 650க்கு விற்கப்படுகிறது. எல்லாவற்றையும் கணக்கிட்டுப் பார்த்தால் மணல் வியாபாரத்தால் ரூபாய் 315 கோடி வருமாம். இதில் அரசுக்கு எவ்வளவோ? அதிகாரத்தில் இருப்போருக்கு எவ்வளவோ?
ஆண்டவனுக்கே வெளிச்சம்.
Wednesday, December 21, 2005
2.என்ன நடந்தாலும் காசு
Posted by ஞானவெட்டியான் at 9:12 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment