Thursday, December 22, 2005

4. சித்த வைத்தியக் குறள்

1.காலை எழுந்தவுடன் காலி வயிற்றில் நீர்
நாலு குவளை நீ குடிக்க நாடு.

2.காலை உணவைத் தவிற்காதே நாளும் உடல்
சோலை போல் காண்பாய் சுகம்.

3.காலையில் இஞ்சியோடு காய்ச்சிய பால் வெல்லம்
கலந்து பருகுதல் களிப்பு.

4.கொதிக்கவைத்த நீரைக் குடித்துவரப்பேதி
அதிசாரம் வராது அறி.

5.இரவினில் கீரை தயிரினை உண்டால்
நரம்பு உடம்புக்குத் தீது.

6.ஒருவேளை மட்டும் உணவருந்தி மாதம்
ஒருநாள் விரதத்தைப் பற்று.

7.உப்பும் புளியும் குறைத்துண்ண நம் உடம்பில்
எப்பவும் இருக்கும் எழில்.

8.உண்ணாதே உஷ்ண உணவதிகம் உண்டால்
உண்டாகும் மூலம் உணர்.

9.செயற்கை உணவு சிதைக்கும் நலத்தை
இயற்கை உணவே இனிது.

10.தாகத்திற்கு அன்றியும் தண்ணீர் அதிகமாய்த்
தேகத்திற்காகக் குடி.

1 Comment:

பரஞ்சோதி said...

அருமையான தகவல்கள். பாராட்டுகள்.